Sunday, October 12, 2014

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைவாக!

Sunday, October 12, 2014
இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைவாக 108 இராணுவ வீரர்கள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இந்த பதவியுயர்வு, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெள்ளிக்கிழமை(10) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
 
யுத்த வீரர்கள் எழுவர் உட்பட, மேஜர் தரத்திலுள்ள 108 இராணுவ வீரர்கள் லெப்டினன் கேர்ணல்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த பதவியுயர்வுகளானது, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முயற்சியின் பலனாக, இராணுவ தினத்தினை முன்னிட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட விசேட பரிசு என இராணுவ தளபதி கொமாண்டர் தயார ரத்னாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment