Tuesday, October 21, 2014
புதுடெல்லி::இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கோரிக்கை.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்சே பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்தியா கவுரவிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
மேலும், ''நான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்துவிட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment