Wednesday, October 1, 2014

ஜெயலலிதா விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Wednesday, 01, October, 2014
ராமேசுவரம்::சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதன் காரணமாக கடந்த 4 நாட்களாகவே பொதுமக்களின் இயல்பு நிலை பாதித்து வருகிறது.
 
இந்நிலையில் ராமேசுவரத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். போஸ், தேவதாஸ், எமரிட், சேசு உள்பட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் ஜெயலலிதாவை உடனே விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையாற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
 
அதன்படி இன்று முதல் ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையிலேயே ஏராளமான படகுகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
 
இதேபோல் பாம்பன் பகுதி மீனவர்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment