Monday, October 13, 2014

வடக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றி ஒரு வருட மும் கழியப் போகிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவிதமான ஒருசிறு விமோசனமும் இல்லை!

Monday,October, 13, 2014
இலங்கை::புலிகள் யுத்தம் புரிந்து முப்பது வருடங்கள் வீணே கழிந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமாதானத் தீ 
ர்வு குறித்துப் பேசி நான்கு வருடங் கள் நாதியற்றுப் போனது. வடக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றி ஒரு வருட மும் கழியப் போகிறது. ஆனால் தமிழ்த் தலைவர்களால் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவிதமான ஒருசிறு விமோசனமும் கிடைக்கவில்லை.
மறுபுறம் இந்த அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்து வருகிறது. இன்று  இருபத்தைந்து வருடங் களுக்குப் பின்னர் யாழ் தேவி தனது பயணத்தை ஆரம்பிக்கின்றது. தீர்வு விடயத் திலும் அரசாங்கம் எப்போதோ நல்லதொரு தீர்வை வழங்கியிருக்கும். அதற்கும் இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத்தான் தடையாக நிற்கின்றது. வடக்கில் ஆட்சி யைக் கைப்பற்றினாலும் நிர்வாகம் செய்யத் தெரியாத நிலையில் அரசாங்கத்தைக் குறை கூறுவதிலேயே ஒரு வருடத்தை வீணாகக் கழித்து நிற்கின்றார்கள்.
தமிழ்க் கூட்டமைப்பிற்குள் அவ்வப்போது பற்றி எரிந்தும் பின்னர் புகைந்தும் கொண்டிருந்த கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்யும் விவகாரம் இப்போது மீண்டும் பூதாகரமாக எரிமலை போன்று வெடித்திருக்கிறது. யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று இவர்களை நம்பி எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் இவர்கள் தமக்குள் பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து கட்சிகளின் கூட்டணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குறித்து அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் தெரி வித்த கருத்துத்தான் மீண்டும் அக்கட்சியின் பதிவு பற்றி கூட்டுக் கட்சிகளிடையே சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவை யெல்லாம் ஆயுதம் தூக்கிப் போராடிய வன்முறைக் கட்சிகள் எனவும், அவற்றுடன் இணைந்து செயற்படத் தான் தயாராக இல்லை என்பதாகவும் கூறியிருந்தார்.
அதிலும் அக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடியிருந்த வேளையில் அவர்களுக்கு முன்பாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியதை அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் வெளிப்பாட்டை உடனடியாகவே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமிருந்து காண முடிந்தது. அவர் தனது எதிர்ப்பை அங்கேயே வெளியிட்டிருந்தார். அதேபோன்று மறுநாள் கோப்பாயில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எப். அணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாகத் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
உண்மையில் இவ்விடயம் குறித்து நாம் அலசி ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் கூட்டமைப்பிலுள்ள ஐந்து கூட்டுக் கட்களிலுமே தவறு இருப்பதாகவே கொள்ள வேண்டிய வரும். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதியப்பட வேண்டும் எனபதில் இக்கூட்டுக் கட்சிகள் உடன்பட்டிருந்தன. ஐந்து கட்சிகளுமே சமமாக நடத்தப்பட வேண்டும் என உடன்பட்டுக் கொண்டாலும் இதில் தமிழரசுக் கட்சியே பழமையான கட்சி என்றும், கூட்டமைப்பில் பிரதா னமானது என்பதுவும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களினால் மனதளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால்தான் தேர்தல் காலங்களில் அக்கட்சிக்கு அதிக ஆசன ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஏனைய தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
தமிழ்க் கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குத் துளியளவும் விருப்பமில்லை என்பது கூட்டுக் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்கு தெரியும். இருந்தும் அவ்வப்போது அதனை ஞாபகப்படுத்தி வந்தனரே தவிர அதற்காக தமிழரசுக் கட்சியுடன் வெளிப்படையாக முரண்டு பிடிக்கவில்லை. இது கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது எனும் அவர்களது உயர்ந்த எண்ணமாகவும் இருக்கலாம். இதனை தமிழரசுக் கட்சி தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி வந்தது என்பதே உண்மை. தமிழ்க் கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்தால் கூட்டுக் கட்சிகளுக்கும் சம பங்கு வழங்கப்பட வேண்டும் என்பது தமிழரசுக் கட்சியி லுள்ள மூத்த தலைவர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் நன்கு தெரியும்.

தனால் அவர்கள் இதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். அதனால்தான் இச்சர்ச்சை எழும்போதெல்லாம் ஏதோவொரு காரணத்தைக் கூறி கூட்டுக் கட்சி களின் வாயை தமிழரசுக் கட்சி அடைத்து வந்தது. இப்போது மீண்டும் அப் பிரச்சினை முன்வைக்கப்பட்டதால் அக்கட்சி இம்முறை முதலமைச்சர் விக்னேஸ் வரனை இதற்குப் பகடைக்காயாகப் பாவித்துள்ளது. அரசியலுக்குள் காலடி வைத்த பின்னர் முன்னுக்குப் பின் முரணான மற்றும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறிவரும் முதலமைச்சர் தமிழரசுக் கட்சி விரித்த வலைக்குள் சிக்குண்டு கூட்டுக் கட்சிகள் குறித்து தரக் குறைவாகக் கூறியுள்ளார்.
கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சி கள் வன்முறையில் ஈடுபட்ட ஆயுதமேந்திப் போராடிய குழுக்கள் என முதல மைச்சர் விக்னேஸ்வரன் கூறிய கருத்தும் அதனைத் தொடர்ந்து அக்கட்சிகளின் தலைவர்கள் விடுத்து வரும் எதிர்ப்புக் கருத்துக்கள் குறித்தும் தமிழரசுக் கட்சி இன்று வரை வாயே திறக்காமை இச்சந்தேகத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. முதலமைச்சரும் மூன்று கட்சிகளும் ஏதோவொரு விடயத்திற்கு முரண்பட்டுக் கொண்டிருக்கையில் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கூட்டமைப்பை பதிவு செய்யத் தேவையில்லை எனச் சம்பந்தமில்லாத அறிக்கையை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா விட்டுள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ என்பன ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் எனவும், பின்னர் அவை ஜனநாயக நீரோட்டத்தில் கட்சிகளாக தமது அமைப்பை இணைத்து இயங்கி வருவதும் முன்னாள் நீதியரசரான இந்நாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவிற்கு நன்கு தெரியும். அத்துடன் ஐயா இன்று இப்பதவியை அலங்கரித்து புலம்பெயர் சமூகம் முதல் இந்திய பிரதமர் வரை பேசப்படுவதற்கு இந்த முன்னாள் ஆயுதக் குழுக்களும் தனக்கு உதவி புரிந்துள்ளன என்பதை அவர் மறந்து விட்டார். அன்றைய பேச்சுவார்த்தைகளில் இவர் இன்று கூறும் வன்முறையாளர்களும் இருந்துள்ளனர்.
இவர் நேர்மையான வராக இருந்திருந்தால் அன்றே இவர்கள் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரி வித்து இவர்களை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும் அல்லது தான் ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. முதலமைச்சர் வேட் பாளராக இவரை தமிழரசுக் கட்சி மட்டும் தீர்மானித்து களத்தில் இறக்கவில்லை. அன்று சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் இணைந்து இவரை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கச் சம்மதித்தமையினாலேயே இவர் இன்று முதலமைச்சராக உள்ளார். அத்துடன் இவர் கூறிய இந்த மூன்று வன்முறைக் கட்களினதும் ஆதரவாளர்களது பெருமளவிலான வாக்குகளும் இவருக்குக் கிடைத்துள்ளது. இன்று கூறும் இந்த வன்முறையாளர்களுடன் ஒரே தேர்தல் மேடைகளில் இவர் ஏறி இறங்கினார் என்பதையும் முதலமைச்சர் மறந்து விடலாகாது.
அத்துடன் புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரனாகப் போற்றும் முதல மைச்சர் அதே போராட்டத்தை நடத்திய ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ இயக்க உறுப்பினர்களை வன்முறையாளர்கள் எனச் சித்தரிப்பதை இம்மூன்று கட்சிக ளினதும் தலைவர்கள் கண்டித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாமலிருக்கவும், எதிர்வரும் தேர்தலில் கூட்டுக் கட்சிகளை முற்றாக ஓரங்கட்டவுமே தமிழரசுக் கட்சி முன்னேற்பாடுகளைச் செய்து வருவதாகவே தோன்றுகிறது.
அதற்கு எவரும் இரையாகித் தமது நற்பெயரைக் கெடுத்துவிடக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமா இல்லையா என்பதை அக்கட்சி தனக்கு வாக்களித்த தமிழ் மக்களிடம் கேட்டறிந்து அவர்களது ஆணைப்படி செயற்படுவதே சாலச்சிறந்தது. இதனைக் கூட்டுக் கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழரசுக் கட்சியை வலியுறுத்துவதே சரியானது என்பது எமது கருத்தாகும்.

No comments:

Post a Comment