Friday, October 17, 2014

ஜெயலலிதாவிற்கு ஜாமின் கிடைத்தது; தண்டனையை நிறுத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Friday, October 17, 2014புதுடில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
 
இவருடைய தரப்பில் ஜாமின் கேட்டு, பெங்களூரு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தள்ளுபடியானது. அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு இன்று 63வது மனுவாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தத், நீதிபதிகள் மதன் பி லோகூர், சிக்ரி ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்ச் ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை விசாரித்தது.
 
ஜெயலலிதா தரப்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தது தான் என்றும், எனவே, இந்த வழக்கில் தன்னுடைய கருத்தை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா ஜாமின் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கியது.
 
அதில், ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்கியும், தண்டனையை நிறுத்தி வைத்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும், மேல் முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment