Monday,October, 13, 2014
இலங்கை::பேஸ்புக் சமூக வலையமைப்பு அரசியல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை::பேஸ்புக் சமூக வலையமைப்பு அரசியல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில தரப்பினர் பாடசாலை மாணவ மாணவியரை அரசியலில் ஈடுபடுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் இதற்கு சமூக வலையமைப்புக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடம் சமூக வலையமைப்புக்களின் ஊடாக அரசியல் பிரச்சாரம் செய்யும் கலாச்சாரமொன்றை உருவாகியுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டுவஸ்நுவர தேசிய பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பாடசாலை மாணவ மாணவியரை பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களை பிழையாக வழிநடத்தி கடந்த காலங்களில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இறுதி நேரத்தில் பாடசாலை மாணவ மாணவியரை பயன்படுத்தி யுத்தத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காக பாடசாலை மாணவ மாணவியரை பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment