Monday, October 6, 2014

புலிகளின் உறுப்பினர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி என்ற கஜீபனின் மனைவி நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தடை!

Monday, October 06, 2014
இலங்கை::புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்  பொன்னைய செல்வநாயகம் கஜதீபன் எனப்படும் கோபியின் மனைவி நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தை மீளவும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கோபி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இராணுவ சுற்றி வளைப்பின் போது கோபி உள்ளிட்ட உறுப்பினர்கள் படையினரின் துப்பர்ககிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.

கோபியின் மனைவி சுவிட்சர்லாந்திற்கு செல்ல முயற்சித்திருந்தார்.

உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய கோபியின் மனைவி சுவிட்சர்லாந்து செல்வதனை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கோபியின் மனைவி சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவர் சுவிட்ஸர்லாந்து செல்வதற்காக உரிய ஆவணங்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையம் சென்ற வேளை அதிகாரிகள் அவரை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சர்மிளாவிடம் சுவிஸ் விசா காணப்பட்ட போதிலும், அவரது கணவர் குறித்து விசாரணைகள் நடைபெறுவதால் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், அவரது கணவர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி ஆதரவாளர்கள் கோபியின் மனைவியை அழைத்து ஏதேனும் சதித்திட்டங்களை மேற்கொள்ளக் கூடுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்மிளா சிறிது நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற சுவிஸ் தூதுரக அதிகரிகள் சர்மிளாவிற்க்கு வெளிநாடு செல்வதற்க்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என இலங்கை அதிகாரிகளுடன் வாதடியுள்ளனர்.

இதேவேளை விமானநிலையத்தில் வைத்து அவரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணையை மேற்கொண்டதாக தெரியவருகிறது.

மேற்குலக நாடுகளுக்கு வீசா பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் காணப்பட்ட போதிலும், புலி ஆதரவாளர்கள் இலகுவில் வீசா பெற்றுக்கொள்வதாக அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
.

No comments:

Post a Comment