Saturday, October 4, 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பம்!

Saturday, October 04, 2014
இலங்கை::இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த வருடத்தில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
 
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இந்த சேவை நடத்தப்படவுள்ளது.
 
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சர்வதேச ஐஆர்கொன் நிறுவனம் இந்த சேவையை நடத்தவுள்ளது.
 
இதேவேளை தலைமன்னாருக்கும் மடுவுக்கும் இடையிலான ரயில் பாதை புனரமைப்புக்கள் தற்போது நிறைவடைந்து கொண்டிருப்பதாக ஐஆர்கொன் நிறுவன முகாமையாளர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
 
இந்த ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம் இலங்கை- இந்திய கப்பல் சேவையை ஆரம்ப ஏதுவாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர், தலைமன்னார் வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட ரயில் சேவையின் ஊடாக இலங்கை- இந்திய கப்பல் சேவையும் சுமூகமாக இடம்பெற்று வந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post a Comment