Saturday, October 04, 2014
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தென்கடல் பகுதியில் நேற்று நள்ளிரவில் பைபர் படகில் வந்த 4 பேர் சவுக்கு காட்டுக்குள் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த மர்ம படகை கைப்பற்றிய போலீசார் தப்பியவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால், தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் இருந்து படகுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வது அதிகரித்து வருகிறது. இங்கிருந்து இலங்கை செல்லும் கடத்தல் நபர்கள் நடுக்கடலில் தங்கக்கட்டிகளுடன் படகில் காத்திருக்கும் இலங்கையை சேர்ந்தவர்களை சந்தித்து பொருட்களை பரிமாற்றம் செய்து கடத்தல் தங்கக் கட்டிகளுடன் கரை திரும்புவதும் அதிகரித்துள்ளது.
கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கஞ்சா, ஹெராயின் பவுடர் போன்ற பொருட்கள் எப்போதாவது சிக்குவது, தங்க கட்டிகள் பிடிபடுவது, இது தொடர்பாக சிலர் கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும், இலங்கைக்கு கடத்தல் என்பது அதிகரித்து தான் வருகிறது. இதனால் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடலோரத்தில் புலனாய்வு துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு கியூ பிரிவு போலீசார் தங்கச்சிமடம் தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கண்ணுப்பாடு கடற்கரை அருகில் வேகமாக ஒரு பைபர் கிளாஸ் படகு வந்தது. படகு கரையை வந்தடைந்ததும் படகிலிருந்து இறங்கிய 4 பேர் அருகிலுள்ள சவுக்கு காட்டிற்குள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
இரவு நேரமானதாலும் காட்டிற்குள் கும்மிருட்டை தவிர வேறு ஒன்றும் தெரியாததாலும் போலீசாரால் அவர்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. தப்பியோடியவர்கள் புலிதீவிரவாதிகளா அல்லது கடத்தல் நபர்களா என்று தெரியாத நிலையில் மன்னார் மாவட்ட பதிவு எண்ணுடன் நீலம் மற்றும் பச்சை கலரில் 17 அடி நீளம், 6 அடி அகலத்தில் இருந்த பைபர் கிளாஸ் படகை போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட படகில் 15 குதிரை சக்தி கொண்ட அவுட்போர்டு இன்ஜினும், நான்கு மீன்பிடி வலைகளும் இருந்தன. நள்ளிரவில் தப்பியோடி தலைமறைவான மர்ம நபர்களை இன்று காலையும் சவுக்கு காடு மற்றும் பாம்பன் கரையோர பகுதியில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment