Sunday, October 19, 2014

மீண்டும் புலிபயங்கரவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச!

Sunday, October 19, 2014
இலங்கை::இலங்கை நாட்டில் மீண்டும் புலிச் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கிய போதிலும், இலங்கையில் மீண்டும் புலிச் செயற்பாடுகளுக்கு இடமில்லை.
நாட்டில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப் போவதில்லை.
 
புலிகள் கொடூரமானவர்கள் என்பதனை உலகிற்கு எடுத்தரைக்க குறுகிய அரசியல் நோக்கங்களைக் களைந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.
 
புலிபயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, நாடு என்ற ரீதியில் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
 
ஐரோப்பாவில்  புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டாலும், இலங்கையில் ஈழக் கோட்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை குறித்து ,பத்திரிகையொன்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம்   எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment