Sunday, October 19, 2014

வட மாகாணத்தில் புலிபயங்கரவாதம் காரணமாக தமது காணி, வீடுகளை இழந்து இது வரை குடியேற்றப்படாத மக்கள் தொடர்பில் விபரங்களை பெற்றுக் கொள்ள பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!

Sunday, October 19, 2014
இலங்கை::வட மாகாணத்தில் புலிபயங்கரவாதம் காரணமாக தமது காணி, வீடுகளை இழந்து இது வரை குடியேற்றப்படாத மக்கள் தொடர்பில் விபரங்களை பெற்றுக் கொள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
 
தற்பொழுது குடியேற்றப்பட்டிருக்கும் காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
இது தொடர்பில் இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடாக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
 
காணி மற்றும் வீடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்பவர்கள் தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, பிரதேச செயலக பிரிவு மற்றும் மாவட்டம் ஆகிய விபரங்களையும் அதேபோன்று பயங்கரவாதம் காரணமாக கைவிடப்பட்ட காணி மற்றும் வீடு தொடர்பில் விபரங்கள் வழங்கும் போது பெயர், உரிமையாளரின் பெயர், கைவிடப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த ஆண்டு முகவரி, கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாவட்ட, பிரதேச செயலகப் பிரிவு ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பப் படிவத்தை வடிவமைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
 
மேலும் இவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் இந்த படிவத்துடன் இணைத்து அனுப்பி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கிறது.
 
விண்ணப்பங்களை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, இலக்கம் 15/5, பாலதக்ஷ மாவத்தை, கொழும்பு 03 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment