Sunday, October 19, 2014

வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்லத் தடை விதித்தமைக்கு எதிராக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வழக்கு!

Sunday, October 19, 2014
இலங்கை::வெளிநாட்டு பிரஜைகள் வடக்கு செல்லத் தடை விதித்தமைக்கு எதிராக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டுப் பிரஜைகள் வடக்கிற்கு பயணம் செய்யும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவிற்கு எதிராக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக இலங்கைத் தமிரசுக் (புலி)கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது அடிப்படை உரிமை மீறலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாகவே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இலங்கைத் தமிழர்கள் வடக்கிற்கு செல்லும் போது பாரிய நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் குறித்த தமிழர்கள் இரண்டு வீசாக்ளைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிககையானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.(புலி)கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

No comments:

Post a Comment