Monday, October 20, 2014

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு!

Monday, October 20, 2014
இலங்கை::தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று  காலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றது.
எண்பதுகளில் ஜூலை மாத வேலைநிறுத்தத்தின் போது செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை அரசாங்க கட்டிட சங்கத்தின் தலைவர் பி.வி. சிரிசேன மற்றும் செயலாளர் டி.ரண்மண்டல ஆகியோருக்கு ஜனாதிபதி நினைவுச்சின்னங்களை வழங்கினார்.
 
இந்நிகழ்வில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன- பசில் ராஜபக்ஷ- காமினி லொக்குகே-குமார வெல்கம- மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான- பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால- ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அதிகாரிகளை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடினார்!
 
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அதிகாரிகளை நேற்று  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடினார்.
    
அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பு 'எமது பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் விருப்பமான நாடு' என்ற தொனிப்பொருளில் அமைந்திருந்தது.
 
சிறுவர் உரிமை அதிகாரிகள்- சிறுவர் ஆரம்பகட்ட அபிவிருத்தி அதிகாரிகள்- பெண்கள் அபிவிருத்தி அதிகாரிகள்- ஆலோசகர்கள்- உளவியல் சமூக- சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட சுமார் ஐந்தாயிரம் பேர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 
அமைச்சர்களான திஸ்ஸ கரல்லியத்த- பவித்ரா வன்னியாராச்சி- பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணாட்டோபுள்ளே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
children-3children-2
Children4
children-5
union-2
union-3

No comments:

Post a Comment