Wednesday, October 1, 2014

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி மறுக்கப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் சித்திரவதை அனுபவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டினை இலங்கை நிராகரிப்பு!

Wednesday, 01, October, 2014
இலங்கை::அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி மறுக்கப்பட்டு,  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் சித்திரவதைகளை அனுபவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டினை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
 
புகலிடம் மறுக்கப்பட்டு நாடுகடத்தப்படும் இலங்கையர்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக அவுஸ்திரேலியாவில் ஊடகம் ஒன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
 
இது குறித்து இலங்கையின் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க கருத்து வெளியிடுகையில்,அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். வானொலி சேவை வெளியிட்ட செய்தி பக்கச்சார்பானது. உண்மைக்குப் புறம்பானது, திரிபுபடுத்தப்பட்டது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களமும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளது.கடந்த காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பான உத்தரவாதங்களை தான் பெற்றுள்ளது எனவும், தான் இந்த வாக்குறுதிகளையே நம்பியிருக்கின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.
 
எனினும், இந்த விடயம் குறித்து விசாரணை செய்வதற்கான தகவல்களை தான் கோரிய போதிலும் அதற்குரிய பதில் கிடைக்கவில்லை எனவும் ஆஸியின் எல்லை பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment