Sunday, October 19, 2014

தமிழ்தேசிய (புலி)கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பு

Sunday, October 19, 2014
இலங்கை::தமிழ்தேசிய (புலி)கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில வாரஇதழொன்று தெரிவித்துள்ளது. அது குறிப்பிட்டுள்ளதாவது

ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சிகளுடனான பேச்சுக்களில் ஏழு அம்ச பொதுவேலைத்திட்டமொன்றை முன்வைத்து வருகின்றது. நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பு,தேர்தல் முறை மாற்றம், சுயாதீன கட்டமைப்புகளை மீள ஏற்படுத்துதல்,வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், மாகாணசபைகளை பலப்படுத்துதல் போன்ற யோசனைகள் இதில் அடங்கியுள்ளன,
இந்த ஆவணம் தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாட்டிற்க்கு வரமுயல்கிறது,இந்த யோசனைகள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன்,பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
கேம்பிரிஜ் டெரசிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்கொண்டுள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பில் உடல்நலகுறைவு காரணமாக கலந்துகொள்ளாத அதன் தலைவர் சம்பந்தன் பின்னர் எமக்கு கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டதும், நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்க்குள் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தீவிர பேச்சக்களை மேற்கொள்வோம். ஏனைய கட்சிகளுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு முடிவெடுப்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார் .

No comments:

Post a Comment