Friday, October 17, 2014இலங்கை::வடக்கு மாகாணத்தில் புதிதாக 25 இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக, காணிகளைக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை வடமாகாண (புலி பினாமி) முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளதாக, திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முகாம்கள் அமைக்கப்படவிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவான தேவைகளுக்காக கட்டடங்களை அமைக்க அனுமதி வழங்கப்படுமே தவிர, இராணுவ முகாம்களை அமைக்க அனுமதிக்க முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
முகாம்களை அதிகரிக்கும் நோக்கில் அண்மையில் இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாணசபையில் முதலமைச்சரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால், முதலமைச்சரின் அனுமதியின்றி கூட முகாம்களை அமைக்க கலாம் என்பதை தெரிந்து கொள்ளாத வடமாகாண முதலமைச்சர்.
No comments:
Post a Comment