Sunday, October 12, 2014
இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியுடன், பிஎஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து வரும் 16ம் தேதி அதிகாலை 1.32க்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுன் நாளை காலை 6.32க்கு துவங்குகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு, சாலை போக்குவரத்து ஆகியவற்றை கண்காணிக்கவும், ஜி.பி.எஸ் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 7 செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2013 ஜூலை 1ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏவும், கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-பியும் விண்ணில் செலுத்தப்பட்டன.
மூன்றாவது செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் கடந்த 10ம் தேதி அதிகாலை 1.56க்கு விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தொழில் நுட்ப கோளாறால், தேதி குறிப்பிடாமல் ராக்கெட் விண்ணில் செலுத்தும் திட்டத்தை விஞ்ஞானிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், வரும் 16ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. பிஎஸ்எல்வி சி-26 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கை கோள் வரும் 16ம் தேதி அதிகாலை 1.32 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 67 மணி நேர கவுன்ட் டவுன், நாளை காலை 6.32க்கு துவங்குகிறது. இதற்கான இறுதி கட்ட பணிகள், ஸ்ரீஹரிகோட்டாவில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைகோள் கடல்வழிப்பாதை, பேரிடர் மேலாண்மை, வாகனங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சி செயற்கைகோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய பிறகு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹசன் மையத்தில் இதன் தகவல்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்ணில் உள்ள புவி வட்ட பாதையில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிமீ தூரத்திலும், அதிகபட்சமாக 20,650 கிமீ தூரத்திலும் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment