Monday, October 20, 2014

13ம் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயையும் ரத்து செய்ய வேண்டியது: அவசியமானதுவிமல் வீரவன்ச!


Monday, October 20, 2014
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயையும் ரத்து செய்ய வேண்டியது அவசியமானது என ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தினை திருத்துவதனை விடவும் புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவது பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டள்ளார்.

13ம் திருத்தச் சட்டம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தோதல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பலவற்றில் மாற்றங்களைச் செய்வதனை விடவும் அரசியல் சாசனத்தையே புதிதாக உருவாக்குவது பொருத்தமானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 18 தடவைகள் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டுவார் எனவும் தமது கட்சி பூரண ஆதரவினை ஜனாதிபதிக்கு வழங்கும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தமது கட்சியினால் முன்வைக்கப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை போல் முஸ்லிம் மக்களை ஏமாற்றி கூட்டமைப்பு வடகிழக்கை கைப்பற்ற எண்ணுகின்றது!
 
தமிழ் மக்களை போல் முஸ்லிம் மக்களை ஏமாற்றி கூட்டமைப்பு வடகிழக்கை கைப்பற்ற எண்ணுகின்றது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இந்த முயற்சிக்கு பகுத்தறிவு உள்ள ஹக்கீம் துணை போக மாட்டார் என நினைக்கின்றேன். ஒரு போதும் ஹக்கீம் அரசைவிட்டு வெளியேற மாட்டார்.
 
யுத்தத்தின் பின் கூட்டமைப்பினர் எம்மீது தவறான கருத்துக்களை பதிய வைத்து விட்டனர்.
 
எனினும் தற்போழுது முஸ்லிம் மக்களை ஏமாற்ற பார்க்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பு தனி நாட்டுக்கான திட்டமாகும்.
அதற்கு இடம் கொடுப்பது நாட்டிற்கு அச்சுறுத்தலாகும். முஸ்லிம் காங்கிரஸின் கடந்த சோக கால நிகழ்வுகள் பற்றி ஹக்கீம் நன்கு அறிவார். எனவே அவரின் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதற்கு இந்த அரசே காரணம்.
 
ஹக்கீம் பகுத்தறிவு உள்ளவர் எனின் புத்திசாலிதனத்துடன், அரசை விட்டு செல்லமாட்டார். நேற்று தேசிய முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், சம்பந்தன் தலைமையிலான கட்சி வடக்கில் பெரிய கட்சியாக இருந்தால். இவர்கள் எமக்கு பெரியவர்கள் இல்லை.
புலிகளின் தடை நீக்கம் எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்றும், குமரன் பத்மநாதன் போன்ற புலி ஊறுப்பினர்கள் இன்று எம்மோடு இருக்கின்றர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment