Wednesday, September 3, 2014

புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் கூட்டமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் செயற்பட்டுக் கொண்டே உள்ளது: சம்பிக்க ரணவக்க!

Wednesday, September 03, 2014
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தின் அடித்தளம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்றபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்னவென்பது வெளிப்பட்டு விட்டது.
 
இந்நிலையில் சுய உரிமைகள், தனி அதிகாரங்கள் என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவது புலிகளின் தனி தமிழீழத்தினை உருவாக்குவதற்காகவே கூட்டமைப்பின் இந்த நோக்கம் என்னவென்பதை தெளிவாக புரிந்து கொண்ட இந்தியாவின் புதிய அரசாங்கமும் இவர்களுக்கு துணை போகும் வகையில் செயற்படுவது எமக்கு ஏமாற்றமளிக்கின்றது.
 
இலங்கையின் தேசிய விடயங்களில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது நாட்டிற்குள் பிரிவினையினை ஏற்படுத்தும் வகையிலோ இந்தியா செயற்பட முயற்சிக்குமாயின் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம். இந்தியாவுடன் அரசாங்கம் நல்ல உறவு முறையினை பேணுகின்றது. இந்தியா இலங்கை அரசுடன் உண்மையாக செயற்படுகின்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது. எனவே, இதனை தொடர்ச்சியாக நல்ல முறையில் கொள்வோம்.
 
மேலும், இந்தியாவின் முன்னைய அரசாங்கத்தின் உதவியுடனேயே இலங்கையில் பிரபாகரனினால் பயங்கரவாத அமைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு துணைபோகும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டது தற்போது புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் கூட்டமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் செயற்பட்டுக் கொண்டே உள்ளது. எனவே, தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமும் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு அடித்தளமிடும் நோக்கிலேயே. எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment