Tuesday, September 16, 2014

இலங்கை வந்த சீன ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!

red-carpet---3
red-carpet--2
red-carpet-----6
red-carpet------7
red-carpet-----8
Tuesday, September 16, 2014
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தமது பாரியாருடன் இன்று காலை 11.45 மணிக்கு B 2472 எயார் சைனா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு மகத்தான செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. 
    
ஜனாதிபதி மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளால் சீன ஜனாதிபதி  வரவேற்கப்பட்டார்.
 
40 யானைகள் அணிவகுத்து நின்று சீன ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தன.
 
சீன ஜனாதிபதியை வரவேற்கும் வகையில்  பல வித கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. விமான நிலைய வீதிகள் இருமருங்கிலும் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
 
விசேட அதிதிகள் பதிவேட்டில் சீன ஜனாதிபதி கைச்சாத்திட்ட பின்னர் சீன தூதுக் குழுவினர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டனர்.
 
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பசில் ராஜபக்ஷ, அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க,  ஆகியோர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
சீன ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பு மா நகர் சீன, இலங்கை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு ஜனாதிபதிகளின் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. 
 
இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளார் 

No comments:

Post a Comment