Tuesday, September 16, 2014

மால்டா அருகே கப்பல் மூழ்கி 700 பேர் பலி!!

Tuesday, September 16, 2014
எனிவா: ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் சென்ற கப்பல் மால்டா அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 700 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகளால் ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
 
எகிப்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை 700க்கும் மேற்பட்டோர் கப்பலில் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய புறப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள். மால்டா அருகே கப்பல் சென்ற போது, கடற்கொள்ளையர்கள் கப்பலை மடக்கினர். அதில் இருந்தவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இதற்கு கப்பலில் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
கோபமடைந்த கடத்தல்காரர்கள் கப்பலை மோதி உடைத்தனர். இதனால் கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்த 700 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதேபோல லிபியா, வடஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாக ஐரோப்பாவுக்கு சென்றவர்களின் படகு மூழ்கி 250 பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பாவுக்கு இதுவரை லட்சக்கணக்கானோர் அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் எல்லோருமே கடல் வழியாகவே வந்து தஞ்சமடைந்தவர்கள். கடந்த ஆண்டு அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்¬கை 60 ஆயிரம். இத்தாலிக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர்.

No comments:

Post a Comment