Tuesday, September 2, 2014

கரையோரப் பாதுகாப்பு மற்றும் முகாமையில் கரையோரப் பாதுகாப்பு படையினர் உதவி!

Tuesday, September 02, 2014
இலங்கை::இலங்கை கரையோரப் பாதுகாப்பு படையினால் கடற்கரை அரிப்பை தடுத்தல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் பிரச்சார நடவடிக்கை இரத்மலானை கரையோரப் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் வருண கரையோரப் பாதுகாப்பு படையினர் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.
 
கடற்கரை அரிப்பானது கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை நடவடிக்கைகள் மூலம் ஏற்படுகிறதுடன் கடலோரம் சேர்த்த ஒரு இயற்கை செயல்பாடாகும். இதன் போது ஒரு பகுதிக் கரையில் உள்ள மணல் பிரிதொரு இடத்துக்கு அடித்துச் செல்வதாகும். இம் மண்னரிப்பு விகிதம் மென்மையான மணல் மூலக்கூறுகள் உள்ள பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இத் திட்டமானது தென்மேற்கு பருவமழையின் விளைவாக நிலவும் கடல் அரிப்பை குறைக்கும் முகமாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment