Wednesday, September 17, 2014

இன்று 64வது பிறந்த நாள்: தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து!

Thursday,September, 17, 2014
காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று  64வது பிறந்த தினம். குஜராத்தில் இருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை காந்திநகருக்கு சென்று தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரத்தை பிரதமரிடம் அவரது தாயார் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின், முதல் முறையாக குஜராத்துக்கு நேற்று சென்றார். இன்று அவருக்கு 64வது பிறந்த தினம். காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தனது பிறந்த நாளை கொண்டாட

இதற்கிடையே, சீன அதிபர் ஷி ஜிங்பிங் இன்று மாலை குஜராத்துக்கு வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறார். மேலும், இருவரும் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். துணை ஜனாதிபதி அமீத் ஹன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர். குஜராத்தில் நடந்து முடிந்த இடைதேர்தலில் பாஜவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேண்டாம் என்றும், காஷ்மீருக்கு உதவுங்கள் என்றும் பாஜவினருக்கு மோடி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடி காரில் காந்தி நகர் சென்று தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து  ஆசி பெற்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தாயாருடன் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்த பிரதமர் மோடி, அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது மோடியிடம் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.5000ஐ ஹீராபென் வழங்கினார்.

No comments:

Post a Comment