Saturday, August 23, 2014

காணாமற்போனோர் குறித்து விசாரிக்க தனி விசாரணைக்குழு: ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம!

Saturday, August 23, 2014
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசாரணை குழுவொன்றை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
 
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவுக்குக் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் ஆணைக் குழுவினூடாக விசாரணைகளை முன்னெடுப்பதா அல்லது தனியான விசாரணை குழுவினூடாக முன்னெடுப்பதா என ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
 
ஆணைக் குழுவுக்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதோடு அடுத்த சாட்சி விசாரணை எங்கு நடத்துவது என அடுத்த வாரம் தீர்மானிக்கப்பட இருக்கிறது. காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் குழுவில் இருவர் இலங்கை வந்துள்ளனர். குழுவின் தலைவரும் இந்திய நாட்டு நிபுணர் குழு உறுப்பினரும் இவ்வாறு இங்கு வந்துள்ளதோடு அவர்களை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment