Saturday, August 23, 2014

பிரபகரன் தோற்றப்பெற்றதானலேயே மொழிப்பிரச்சினை ஏற்பட்டது: ரணில் விக்கிரமசிங்க!

Saturday, August 23, 2014
முன்னாள் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் யூ.எல்.எம் பாருக்கின் 50 வருட கால அரசியல் வாழ்வும் ‘யுக பெரலின் துங்கோரல அபிமானய’ என்ற நூலும்   பி.எம். ஜ.சி.எச்.ல் வைத்து  வெளியீட்டு வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் இலங்கை பாராளுமன்றத்தின்  சபாநாயகர் சமல் ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்ணாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம், ஆரியவண்ச தேரர் மற்றும் யூ.எல்.எம் பாருக்கும் உரையாற்றினார்கள். மண்டபம் நிறைந்து தமிழ் சிங்கள முஸ்லீம்கள் பௌத்த தேரர்களும் கலந்து கொண்டணர்;.
 
நூலின் முதற்பிரதியை சாபாநாயகரிடம்  யு.எல்.எம பாருக் வழங்கி வைத்தார் எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க யு.எல்.எம் பாருக்கின் வெப்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.  அத்துடன்  அங்கு வருகைதந்திரந்த பலர் பாருக்கை பொண்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். அத்துடன் அனைவருக்கும் பாருக்கின் நூல் வழங்கி வைக்கப்பட்டது.பெரும்பாலான எதிர்கட்சிகள் ஆளும் கட்சிகள் மற்றும் கேகாலை மாவட்ட அரசியல் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
 
பாநாயகர் சமல் ராஜபக்ச உரையாற்றுகையில்;
கடுகண்னாவையில் சிங்கள மரைக்கார் போன்று ருவன்வெல்லையில் ஒரு சிங்கள பாருக்காகவே நான் பாருக்கைப் பார்க்கின்றேன்.
யு.எல்.எம் பாருக் பாராளுமன்றத்திற்கு வந்தால் என்னை கண்டுதான் செல்வார் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறியதுபோன்று அவர் ஒரு ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிக்காரர் என்றுதான் நினைத்தேன்.
 
அவரிடம் நிறம் கட்சி பார்க்காமல் சேவைசெய்யும் ஒரு நல்ல மனிதர். இன்றும் தமது பிரதேச மக்களது பிரச்சினைகளுக்கு சகல அமைச்சுப் படிகளுக்கு ஏறி அந்த மக்களது குறைகளுக்;கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கின்ற ஒருவராகத் தான் அவரைக் காண்கின்றேன்.
 
இன்று அவர் திருமணம் முடித்தும் 50வது ஆண்டாகும். அவர் நல்ல சிங்களத்தில் பேசக்கூடிய பேச்சாற்றல் உள்ளவர் பாராளுமன்றத்திலும் சிறந்த முறையில்  சிங்களவர்களைவிட திறம்பட உச்சரித்து உரையாற்றுவார்.
அவர் இன்றும் சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்த அம் மக்களின் சுக துங்கங்களில் இரண்டரக் கலந்து வாழ்ந்து வருகின்றார். அவர் ஆரம்பித்த பாருக் மன்றம் 9 வருடங்கள் ஆகின்றன. எனது தேர்தல் தொகுதியில் அருகில் உள்ள முஸ்லீம் கிரமாங்கள் உள்ளன.  இன்றும் அவர்கள் நண்பர்களாகவும் அந்நியோன்னியமாகவுமே பழகி வருகின்றேன்.
 
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் -
யு.எல்.எம் பாருக் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் அவர் ஒர் இலங்கையன் என்ற போர்வையில் ருவென்வல்லைத் தொகுதியில் வாழும் சகல இன மக்களினதும் சுக துங்கங்கள் கலந்து கொண்டு மக்களின் மக்களாகவே வாழ்ந்தார்.
 
ஆனால் பிரபகரன் தோற்றப்பெற்றதானலேயே மொழிப்பிரச்சினை ஏற்பட்டது. யு.எல்.எம் பாருக்  பௌத்த பண்சலைகள், பள்ளிவாசல், ஹிந்து கோவில் சகல மத நிலையங்களுக்கும் தனது சேவைக்காலத்தில் சேவை செய்துள்ளார்.
 
நாம் மொழி மத ரீதியாக பிரித்தால் மிகவும் இலேசாக வெளிநாடுகள் நமது நாட்டைப் பிரித்துவிடும.; நமது நாட்டில் வாழும் சகல இனமக்களும் ஒரு கட்டுக்கோப்பாக ஜக்கியமாக அவரவர் உரிமைகளை அனுபவிக்க விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்  நம்மை யாரும் பிரிக்க முடியாது.
எமது நாட்டில் உள்ள பௌத்த மதம்  இந்தியாவில் இருந்து தான் வந்தது. கேரலா மலையலாம் போன்ற பிரதேச மத பழக்க வழங்கங்கள் எமது பௌத்த மத்திலும் உள்ளன.
 
எமது பௌத்த மதத்தை காப்பதற்கு விஷனு தெய்வத்திடம் ஒப்புக் கொடுக்கின்றோம். இந்தியாவில் பல மத இனங்கள் வாழ்ந்தாலும் நாம் இந்தியன் என்ற கோட்பாட்டில் அம் மக்கள் வாழ்கின்றனர். என ரணில் விக்கிரமிசிங்க கூறினார்.
 
இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் உரையாற்றுகையில்;
அன்று சிறிகொத்தவில் 191 ஜ.தே.கட்சி இளைஞர் அமைப்புக்கள் இருந்தன. 1 மட்டும் முஸ்லீமாக இருந்தது. 190 கிளைகளும் அன்று யு.எல்.எம் பாருக்கை அங்கீகரித்தது.
அவர் இளைஞராகவும் 15வயதில்யிருந்தே  அரசியலுக்கு உட்புகுந்தார். முன்னாள் அமைச்சர்  பி.சி.இம்புலானாவின் ருவென்வல்ல  இடத்திற்கு பாருக்கை  கொண்டுவந்தார்கள்.
 
அவரை அஙகுள்ள சகல ஜ.தே.கட்சி உள்ளூர்க் கிளைகளும் ஏகமனதாக தெரிபுசெய்தன. சிங்கள பௌத்த அமைப்புக்கள் எல்லாம் அவரை ஏகமனதாக தமது  பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டன.
இந்த நிலைமை இப்போதைய ஜ.தே.கட்சிக்குள் வரவேண்டும். அமைச்சர் பாருக்குக்காக இங்கு இந்த வந்துள்ள மண்டபத்தை பாருங்கள், தமிழ் சிங்களவர்கள் முஸ்லீம்கள் பல கட்சி அரசியல் தலைவர்கள் மத குருமார்கள் அனைவரும் அவரை மதித்து வந்துள்ளார்.
 
அவர் இன்றும் எந்த அரசியல் பலத்தையும் கொண்டிருக்கவில்லை. அவர் ஒர் இலங்கையர் ஒரு மனித நேயம்ருக்கின்றது. அவரது சேவை இன்று அந்த பிரதேச மக்களுக்கு சேவை செய்கின்றனர். அதனை நன்றிக்கடணாகவுமே மக்கள் பார்க்கின்றனர்.
 
நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் உரையாற்றுகையில்;
யு.எல்.எம் பாருக் இன்றும் தனது பிரதேசத்தில் வாழும் மக்களது பிரச்சினைகளுக்காக அவர் எந்த அமைச்சிலும் ஏறி அந்தப் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒர் அரசியல்வாதியாகத் உள்ளார்.
எனது அமைச்சிலும் தமது பிரதேசவாசிகளது பிரச்சினைக்கு அமைச்சிக்களில் பல படிகள் ஏறி வந்து பேசுவார். நீங்கள் ஏன் வந்தீர்கள் அதனை போனில் பேசியிருக்கலாமே என்று சொன்னாலும் அவர் தமது பிரதேச பிரச்சினை என்று வந்தால் அதனை நேரயாக பேசி தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு அரசியல் சேவகனாக திகழ்கின்றார்.
 
அவர் 15 வயதில் அரசியல் பிரவேசித்து என்.எம் பெரேராவுடன் தேர்தலில் போட்டி போட்டு ஜே.ஆர். ஜெயர்வத்தனவின் மற்றும் ஆர்.பிரேமதாசவின் ஆசிர்வாதம் பெற்று ஜ.தே.கட்சி பாராளுமன்றம் தெரிவானார்.
 
மக்கள் பிரநிதியாக வந்தவர். அவர் போக்குவரத்து பிரதியமைச்சராக இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிக்களுக்கெல்லாம் சென்று பஸ் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சேவை செய்தவர். அதன் பின்னர் போக்குவரத்து சபையின் தலைவராகவும் கடமையாற்றி தமது சேவையைத் திறம்படச் செய்தார்.

No comments:

Post a Comment