Tuesday, July 8, 2014

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோ­ஷவின் இலங்கை விஜயத்தின் பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள்: விமல் வீரவன்ஸ!

Tuesday, July 08, 2014
இலங்கை::தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோ­ஷவின் இலங்கை விஜயத்தின் பின்னணியில் புலம்பெயர் அமைப்புக்கள் இருப்பதாக நேற்று பகிரங்கமாக குற்றம் சுமத்திய அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ, அரசியல் தீர்வு விடயத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு, தமது கட்சி முன்வைக்கும் யோசனைகளை அரசு நிராகரிக்குமானால் அரச கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோ சிக்கப்படும் என்றும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ள சிறில் ரமபோ­ஷ, அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிப்பாரானால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஏனெனில், நாம் அரசிடம் முன்வைத்த 12 அம்சக் கோரிக்கையில் நான்காவது கோரிக்கையில், தமிழ் சிங்கள இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு என எமது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிவிட்டோம்.

இதனை, அரசும் ஏற்றுக்கொண் டது. இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறில் ரமபோ­ அரசியல் தீர்வு விடயத்தில் மத்தியஸ்தம் வகிப்பார் எனக் கூறப்படுகிறது.

அவ்வாறு அவர் செயற்படுவாரா னால் அதற்கு நாம் கடுமை யான எதிர்ப்பை வெளியிடுவோம். ஆனால், அரசோ ரமபோஷா மத்தியஸ்தம் வகிக்க வரவில்லை என தெளிவாக கூறிவிட்டது.
 
ஆகவே, அரசின் கூற்றுக்கமைய ரமபோ­ செயற்படுவாரானால் நாம் ஒருபோதும் எதிர்க்கவே மாட்டோம். அத்தோடு, இவரின் விஜயத்திற்குப் பின்னால் புலம்பெயர் அமைப்புக்களே இருக்கின்றன என்பதையும் இங்குக் கூறிக்கொள்ள வேண்டும். 
 
காரணம், தென்னாப்பிரிக்காவில் நிறப்பிரச்சினையே ஏற்பட்டது. இதுவும் அங்கு பெரும்பான்மையாக வாழும் கருப்பினத்தவர்களை சிறுபான்மையினமாக வாழும் வெள்ளையினத்தவர்கள் அடக்கி ஆட்சி செய்தபடியாலேயே பிரச்சினைகள் வெடித்தன.
 
அதேபோன்றதொரு கருத்தை, அதாவது, இலங்கையில் வாழும் பெரும்பான்மையின தமிழர்களை சிறுபான்மையின சிங்களவர்கள் ஆழ்வதாக ஒரு மாயையான கருத்தை புலம்பெயர் அமைப்புக்கள் தென்னாபிரிக்காவிடம் எடுத்துச்சென்றுள்ளன.

இதனாலேயே தென்னாப்பிரிக்கா இலங்கை விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. ஆனால், உண்மையதுவல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஆகவே, மத்தியஸ்தம் குறித்த பேச்சுக்கே எமது கட்சியில் இடமில்லை என்பதும் உள்நாட்டு பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்க்க வேண்டும் என்பதுமே எமது நிலைபாடு.

மேலும் இதுவிடயத்தில் அரசு எமது கோரிக்கைகளை ஏற்கமறுக்குமானால் அரச கூட்டணிக்குள் இருந்து விலகுவது குறித்து ஆலோசிக்கப்படும்.'' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment