Tuesday, July 8, 2014

கடந்த 2 ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு!

Tuesday, July 08, 2014
புதுடெல்லி::கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அதன் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
 
 இந்நிலையில், ஏர்இந்தியாவின் நிதி நிலைமை குறித்து மக்களவையில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்த துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு எழுத்து மூலம் அளித்த பதில்:ஏர்இந்தியா நிறுவனம் கடந்த 2012-13ம் ஆண்டில் ரூ.5490 கோடி இழப்பை சந்தித்தது. கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்துக்கு ரூ.5389 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரை ஏர்இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதர படிகள், ஏப்ரல் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி அன்று ஏர்இந்தியா நிறுவனம் ஸ்டார் அல்லயன்ஸ் அமைப்புடன் கூட்டு சேர உள்ளது. இதன் பிறகு ஏர் இந்தியாவின் வருமானம் 5 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்இந்தியாவின் நிதி பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு ரூ.7400 கோடி கடன் உத்தரவாதம் அளித்துள்ளது. இவ்வாறு கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment