Tuesday, July 22, 2014

இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்!

Tuesday, July 22, 2014
இலங்கை::இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணுவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக பாரதீய ஜனதாக் கட்சியின் பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, சுப்பிரமணியம் சுவாமி நேற்றுமாலை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது புலிகளுக்கு எதிரான போர் நிறைவடைந்தமை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி குறிப்பிட்டார்.
 
இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று என்றும் சுவாமி தெரிவித்தார்.
 
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடல்வள சுற்றாடல் கற்கைக்கான நிலையம் ஒன்றை நிறுவ இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவில் பாரதீய ஜனதாக்கட்சியின் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் சுரேஸ் பிரபு, ஊடகவியலாளரும் வர்ணனையானருமான மாதவன் நலபாட் ஆகியோரும் அடங்கியிருந்தனர்..
 
பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக இருதரப்பு போச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இந்து சமுத்திரத்தைச்சுற்றிய நாடுகளின் சம்மேளனத்தினால் (Indian Ocean Rim Association) தண்ம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
 
இந்து சமுத்திர பாதுகாப்பில் இலங்கை வழங்கும் ஒத்துழைப்பும் சுட்டிக்காட்டப்பட்டது. சமுத்திர சூழல் திறன் கல்வி நிலையத்தை இலங்கையில் அமைப்பதற்கு இலங்கை விரும்பியுள்ளதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். தீவிரவாதத்தை தீர்க்கமான முறையில் கையாண்ட ஒரே நாடு இலங்கையாகும் என கலாநிதி ராமானுஜன் தெரிவித்தார்.
 
பாரதீய ஜனதா  கட்சியின் உறுப்பினர்களான கலாநிதி சுரேஷ் பிரபாகர் பிரபு ,கலாநி வாரி சேசாஸ்திரி ராமானுஜன், கலாநி ஸ்வாபன் தாஸ் குப்தா ,பேராசிரியர் மாதவ் நாலபட் ஆகியோரும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment