Sunday, July 6, 2014

கட்டணம் செலுத்தி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க ஏற்பாடு : மத்திய அரசு பரிசீலனை?.

Sunday, July 06, 2014
சென்னை::கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இங்கை கடற்படையினரால் கைது செய்யபப்டுவதும், விரட்டியடிக்கப்படுவதும் நாலுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நிரந்தர தீர்வு என்பது எட்டாக்கணியாகவே உள்ளது.

கஞ்ச தீவு அருகில் மீன் வளம் அதிமாக காணப்படுவதால், தமிழக மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்கின்றனர். ஆனால், இங்கையோ, அங்கு தமிழர்கள் மீன் பிடிக்க கூடாது என்பதை வலியுறுத்தி மீனவர்களின் வலையை அறுத்தல், மீனவர்களை அடிப்பது, சிறை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, எதிர் காலத்தில் கச்சத்தீவு பகுதியில் கட்டணம் செலுத்தி தமிழக மீனவர்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க ஏற்பாடு செய்து கொடுக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்த யோசனையை தமிழக மீனவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் அடுத்த வாரம் டெல்லி வர உள்ளார். அப்போது தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment