Saturday, July 5, 2014

முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூருக்கு வர அமைச்சர் நேரில் அழைப்பு!

Saturday, July 05, 2014
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவுடன் தலைமைச்செயலகத்தில் நேற்று சிங்கப்பூர் குடியரசின் சட்டம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் சந்தித்துப்பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தை அன்பாக வரவேற்று தமிழகத்திற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகளை எடுத்துக்கூறினார்.
இருநாட்டு மக்களும் கலாச்சார ரீதியாகவும், பன்பாட்டு ரீதியாகவும் மொழி ரீதியாகவும், பரஸ்பரம் உறவுகொண்டு முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதை முதல்வர் நினைவு படுத்தினார். வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்க தமிழகம் தயாராக உள்ளது என்றும், தெற்காசியா, கிழக்காசியா குறிப்பாக ஜப்பான், கொரியா நாடுகள்  மற்றும் உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர் என்றும்,
 
இந்தியாவில் தமிழகத்திலேயேதான் முதலீடு செலுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் பலர் பாராட்டி உள்ளதை சிங்கப்பூர் அமைச்சரிடம் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டை வரவேற்கும் விதத்தில் தமிழகத்தில் 2023 தொலைநோக்கு திட்டத்தை இலக்காகக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மனித மூலதனத்தை வளர்த்து எடுக்கவும், 2023ஜல் 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதன இலக்கை கொண்டிருப்பாதவும், முதல்வர் கூறினார். தொலைநோக்கு திட்டம் 2ஜவது பகுதியில் 217 குறிப்பிடத்தக்க துறைகளில் விஷேச திட்டங்கள் இனம் காணப்பட்டுள்ளன என்றும் முதல்வர் எடுத்துக்கூறினார்.
சென்னையை  நிதி நகரமாக மாற்றியமைப்பது உட்பட பல்வேறு முக்கிய திட்டங்கள் தமிழகத்தை கொண்டுவர விரும்புவதாகவும், அதற்கு சிங்கப்பூரின் அனுபவம் மிகுந்த பயன் உள்ளதாக அமையும் என்றும் முதல்வர் கூறியதோடு, தமிழகத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவுகளை வளர்த்து எடுக்க முதல்வர் கூறினார்.
மதுரை, தூத்துக்குடி தொழில் வளாகத்திட்டதை தமிழக அரசு வளர்த்து எடுக்க விரும்புவதாகவும், இதையொட்டி தமிழக துறைமுகங்களை மேம்படுத்தவும் அத்துடன் தமிழக கடற்கரை பகுதிகளை வளர்த்து எடுக்கும் விதத்தில் போக்குவரத்து சீர்படுத்துதல் மற்றும் உபரிநீர் மேம்பாட்டு திட்டம், கழிவுப்பொருள் சீர்படுத்தும் மேலாண்மை, சுற்றுலா வளர்ச்சி போன்ற பல்வேறு நகரப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் அமைச்சரிடம் எடுத்துக்கூறினார். தமிழகமும், சிங்கபூரும் இணைந்தால் நல்ல நிதி மேலாண்மை திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகவேல் கூறுகையில், சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் கட்சியான அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றதற்கு பாராட்டி பேசினார். அதோடு சிங்கப்பூர் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் வாழ்த்துக்களையும் முதல்வரிடம் சிங்கப்பூர் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடுக்கு உள்ள முதல் மூன்று இடங்களில் தமிழகம் முதலாவதாக உள்ளது என்றும், தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்படவேண்டும் என்றும் அவர் எடுத்துக்கூறினார். அதோடு, சிங்கப்பூருக்கு அதிகார பூர்வரமாக முதல்வர் ஜெயலலிதா வரவேண்டும் என்றும், அன்பாக அழைப்பு விடுத்தார். அதற்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூர் அமைச்சருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் உடன் வந்தது. சிங்கப்பூர் அமைச்சருடன் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதுவர் லிம்துயன்குவான், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத்தூதர் ராய்கோ, தெற்காசியா மற்றும் சப்சகாரா ஆப்பிரிக்கா பகுதியில் டைரக்டர் ஜெனரல் லாரன்ஸ்பே, வெளியுறவுத்துறை அதிகாரி சரினிஜான் ஆகியோர் இருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதாவுடனா இந்த சந்திப்பின்போது  அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பி.தங்கமணி, தலைமைச்செயலாளர் மோகன் வர்க்கீஸ் சுங்கத், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச்செயலாளர் கே.சண்முகம், தொழில்துறை முதன்மை செயலாளர் சி.வி.சங்கர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment