Thursday, July 03, 2014
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் டோனி
அப்போட் புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கையில் சமாதானம் நிலவி வருவதாகத்
தெரிவித்துள்ளார்.யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மனித
உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நடுக் கடலில் புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைக்கும் அவுஸ்திரேலியாவின் நடவடிக்கை இரகசியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்iகாயளர்களை கடல் வழியாக திருப்பி அனுப்பி வைப்பது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் அவுஸ்திரேலிய கடற்பரப்பை சென்றடைந்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகுகளுக்கு என்னவாயிற்று, அவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனவா என்பது பற்றி அப்போட் நேரடியாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment