Thursday, July 24, 2014

சீனாவின் உதவியுடன் அமையவுள்ள விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள்: ருவாண் வணிகசூர்ய!

Thursday, July 24, 2014
இலங்கை::இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவாண் வணிகசூர்ய இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் சீனாவின் உதவியுடன் அமையவுள்ள  விமான பராமரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினரே முழுமையாக கையாள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையால் பயன்படுத்தப்படும் சீனா தயாரிப்பு விமானங்களின் பராமரிப்பிற்காகவே சீனா உதவியுடன் இதனை அமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது குறிப்பிட்ட சீனா விமானங்களை பாக்கிஸ்தானிற்கு பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினருக்கு ஜப்பானின் உதவியுடன் அவ்வாறான பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
விமானப் பராமரிப்பு நிலையத்தின் பணிகள் இலங்கையர்களினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

சீன உதவியுடன் விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச விமான பராமரிப்பு நிலையத்தின் சகல பணிகளையும் இலங்கையர்களே மேற்கொள்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை படையினருக்கு சொந்தமான சீன உற்பத்தி விமானங்களை பராமரிப்பதே இந்த விமான பராமரிப்பு நிலையத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானப் பராமரிப்பு பணிகள் தற்போது பாகிஸ்தானினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பராமரிப்பு நிலையத்தையும் சீனா அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விமானப் பராமரிப்பு நிலையமொன்றை அமைப்பதன் மூலம் பாரியளவிலான பணத்தை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment