Wednesday, June 11, 2014

அரசாங்கத்தின் ஆதரவின்றிய விசாரணைகளில் பயனில்லை: அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் டெல்மே லாங்குலிர்!

மெல்பேர்ன்::அரசாங்கத்தின் ஆதரவின்றிய விசாரணைகளில்பயனில்லை என அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் டெல்மே லாங்குலிர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட உள்ளது. அரசாங்கத்தின் ஆதரவின்றி நடத்தப்படும் சர்வதேச விசாரணைகளின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டிள்ளார். இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

No comments:

Post a Comment