Saturday, June 14, 2014
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் வலுப்படுத்த வேண்டுமென
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் மனித உரிமைகளை பாதுகாக்கக்
கூடிய வகையிலும் விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டுமென அவர்
வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான சவால்கள் நெருக்கடிகள் குறித்து புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் காத்திரமான உறவுகளை பேண வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment