Wednesday, June, 11, 2014
இலங்கை::சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும்
இலங்கைப் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கடந்த எட்டு மாதங்களில்
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் அவுஸதிரேலியாவை சென்றடையவில்லை என
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில்
எந்தவொரு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகும் அவுஸ்திரேலியாவிற்குள்
பிரவேசிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு அதிகாரிகளுடன்
ஒத்துழைப்பு , அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு பணிகள் மற்றும் புதிய
அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக இவ்வாற படகுப் பயணங்கள்
தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment