Wednesday, June 4, 2014

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 759 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 549 பேர் பாதிப்பு!

Wednesday, June 04, 2014
இலங்கை::சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 759 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை வரையில் அசாதாரண காலநிலை காரணமாக 23 பேர் மரணித்துள்ளனர்.
அத்துடன். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக காணப்படுகின்றது.ஜிங் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனிடையே, இன்றும் பல பிரதேசங்களுக்கு மழையுடன் கடுங்  காற்றும் வீசும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுக் கூறியுள்ளது.

No comments:

Post a Comment