Friday, April 4, 2014

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் நாட்டுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தில்:

Friday, April 04, 2014
இலங்கை::
புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் நாட்டுக்கு எதிராக பாரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியாருவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாரியளவில் பொருட் செலவில் இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச சுயாதீன விசாரணைகளை நியாயப்படுத்தும் நோக்கிலான தீவிர போலிப் பிரச்சார முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் 146679 தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 70000 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும்  புலி ஆதரவு அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும் நோக்கில் புலி ஆதரவு அமைப்புக்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment