Monday, April 14, 2014

வட மாகாண சபையை இயங்கவிடாமல் முடக்க சதி முயற்சி: (புலிகளின் துணைப்படை) முதலமைச்சர் குற்றச்சாட்டு!

Monday, April 14, 2014
இலங்கை::வட மாகாண சபையை இயங்கவிடாமல் முடக்குவதற்கான சதி முயற்சிகள் இடம்பெற்று வருவதாக (புலி)கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டுகின்றார். வட்டுக்கோட்டை – சங்கரத்தை, குளவத்தை முருகமூர்த்தி கோவில் மணிமண்டப திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இன்று எம்மக்கள் எம்மைத் தமது பிரதிநிதிகளாக வட மாகாண சபைத் தேர்தலின் போது தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆனால், எம்மைச் செயல்பட விடாமல் எல்லாவிதமான முட்டுக் கட்டைகளும் எம்முன் போடப்பட்டுள்ளன. வட மாகாண சபையை இயங்க விடாமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 
இப்பேர்ப்பட்ட சூழலில் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்வதில்தான் எமது வருங்கால வளர்ச்சி தங்கியுள்ளது. அரசாங்கம் எம் செயல்பாடுகளில் தடைகளையும், தாமதங்களையும் உட்புகுவித்தால் அதற்கு மாற்றீடாக நாம் எம்முள் ஒற்றுமையாய் இருந்து எமது காரியங்களைச் சாதிக்க முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment