Monday, April 14, 2014

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து எச்சரிக்கையுடன் உள்ளனர்: ருவான் வணிகசூரிய!

Monday, April 14, 2014
இலங்கை::தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து எச்சரிக்கையுடன் உள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயற்படும் தரப்புகள் தொடர்பில் பொது மக்களும் அவதானமாக இருக்க வேண்டும். எனினும் பாதுகாப்பு தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் இராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 5 லட்சம் ஏக்கர் காணி பொது மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவ முகாம்கள் காணப்பட்ட 26 ஆயிரத்துக்கும் அதிகமான காணிகளில் முகாம்கள் அகற்றப்பட்டு தனியாருக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.- என்று மேலும் கூறப்பட்டது.

No comments:

Post a Comment