Thursday, April 24, 2014

எதிர்க்கட்சிகள் முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் அடுத்த ஆண்டில் தேர்தலை நடத்த தயார்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

Thursday, April 24, 2014
இலங்கை::
எதிர்க்கட்சிகள் முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் அடுத்த ஆண்டில் திடீர் நாடாளுமன்றத் தேர்தலையோ, ஜனாதிபதித் தேர்தலையோ நடத்த தாம் தயார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று காலை ஊடக ஆசிரியர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எனது பதவிக்காலம் 2016ம் ஆண்டிலேயே முடியவுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் திடீர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நான் திட்டமிடவில்லை. எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்தக் கோரினால், அதுகுறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறேன். முதலில் எந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்க வேண்டியுள்ளது.
 
சட்டத்தை மீறினால், எந்த அரசியல்வாதியானாலும், அவர் அரச தரப்பைச் சேர்ந்தவராக இருந்தால் கூட, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அம்பாந்தோட்டைத் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் கூட சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. எந்தவொரு மதக் குழு தொடர்பான சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க சமய விவகார அமைச்சில் தனியான சிறப்பு காவல்துறை பிரிவு ஒன்று உருவாக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment