Friday, April 18, 2014

தேசத்துக்குமகுடம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டகொங்கீறிட் வீதி திறந்துவைப்பு!

Friday, April 18, 2014
இலங்கை::தேசத்துக்குமகுடம் தேசியவேலைத்திட்டத்தின் மட்டக்களப்புமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தபல்வேறுஅபிவிருத்திப்பணிகள் தொடர்ந்துபொதுமக்களிடம் வழங்கப்பட்டுவருகின்றன.
  
மட்டக்களப்புபட்டிப்பளைபிரதேசசெயலாளர்பிரிவுக்குட்பட்டமுனைக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் வீதிமக்களின் பாவனைக்காதிறந்துவைக்கப்பட்டது.

தேசத்துக்குமகுடம் தேசியவேலைத்திட்டத்தின் கீழ் காஞ்சிரங்குடா பெரிபொயின்ட் வீதியே இவ்வாறுகொங்கிறீட் இடப்பட்டுபுனரமைக்கப்பட்டுதிறந்துவைக்கப்பட்டது.

குடந்தகாலத்தில் மிகவும் மோசமானநிலையில் இருந்த இந்தவீதியைபுனரமைத்துதருமாறுமீள்குடியேற்றபிரதியமைச்சரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்தவீதிபுனரமைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை கிலோ மீற்றர்தூரம் கொண்ட இந்த வீதியானது சுமார் 85 இலட்சம் ரூபாசெலவில் கொங்கிறிட் இடப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் இன்றுநடைபெற்றது.

இந்தநிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்படபலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment