Wednesday, April 2, 2014

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிரான மனு: மதுரை நீதிமன்றம் நிராகரிப்பு!

Wednesday, April 02, 2014
மதுரை::இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று நிராகரித்தது.
 
ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி தரும் திட்டத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிடக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட விரும்பவில்லை என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:

Post a Comment