Wednesday, April 30, 2014

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு கனவு காண்­கின்­றது; ஆனால், அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு இலங்­கையில் ஒரு­போதும் இட­மில்லை: குண­தாச அம­ர­சே­கர!

Wednesday, April 30, 2014
இலங்கை::சர்­வ­தே­சத்தின் அனு­ச­ர­ணையை பெற்று இலங்­கைக்குள் பிரி­வி­னை­யை ஏற்­ப­டுத்­தலாம் என தமிழ் கூட்­ட­மைப்பு கனவு காண்­கின்­றது. ஆனால், அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு இலங்­கையில் ஒரு­போதும் இட­மில்லை என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.
 
வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வது மீண்டும்  ­பு­லி­களை உரு­வாக்­கு­வ­தற்கு சம­னாகும். பாது­காப்பு விட­யத்தில் அர­சாங்கம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.
 
இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு புதிய அர­சியல் யாப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற வட மாகாண சபை தீர்­மானம் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்.
 
அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது மீண்­டு­மொரு பிரி­வினைவாதப் போராட்­ட­மே­யாகும்.இலங்­கையின் இனப்­பிரச்­சி­னையை தூண்­டு­வது சிங்­களத் தரப்­பினர் அல்ல தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மட்­டு­மே­யாகும். இன்று அவர்கள் தீர்­வுக்­காக குரல் கொடுப்­பதைப் பார்த்து தமிழ் மக்கள் ஏமாந்து வாக்­க­ளிக்­கின்­றனர்.
 
உண்­மை­யா­கவே வடக்கு, கிழக்கை இணைத்து சமஷ்டி அர­சியல் யாப்­பொன்று கொண்டு வரப்­ப­டு­மாயின் இறு­தியில் மீண்­டு­மொரு இனப்­பி­ரச்­சி­னைக்கு தூண்­டு­கோ­லாக அமையும். இனப்­பி­ரச்­சி­னை­யினை மீண்டும் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­பினர் சர்­வ­தேச சக்­தி­களை ஒன்­றி­ணைத்து முடி­வு­களை மேற்­கொள்­கின்­றனர்.
 
கூட்­ட­மைப்­பி­ன­ரதும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரி­னதும் பகற் கனவு ஒரு­போதும் பலிக்கப் போவ­தில்லை. இவர்­களின் எண்­ணத்தை நிறை­வேற்ற நாம் இட­ம­ளிக்­கப்­ போ­வ­து­மில்லை.
 
அதேபோல் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்னேஸ்­வரன் பதவி ஆசையில் புலம்பிக் கொண்­டி­ருக்­கின்றார். முத­ல­மைச்­ச­ருக்­கான அதி­கா­ரங்கள் போத­வில்­லை­யென்றால் அவர் பதவி விலக வேண்டும். மேலும், வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றி மீண்டும் வடக்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பாட்டை அர­சாங்கம் செய்­யக்­கூ­டாது.
 
ஆரம்­பத்தில் தவ­றி­ழைத்­த­மையின் கார­ணத்­தி­னா­லேயே விடு­த­லைப்­பு­லிகள் தீவி­ர­வாதம் உரு­வாக்­கப்­பட்டு பெரி­ய­தொரு போர் ஆரம்­ப­மா­கி­யது. ற்­போது புனர்­வாழ்வு பெற்­றுள்ள ­புலி இயக்க உறுப்­பி­னர்­களை கண்­கா­ணிக்­காது வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­றினால் முன்­னதை விடவும் மோச­மான வகையில் தமிழ் தீவி­ர­வாதம் உரு­வாக்­கப்­படும்.
 
நாட்­டி­னதும் பொது மக்­க­ளி­னதும் பாது­காப்பு அர­சாங்­கத்­தி­டமே உள்­ளது. மீண்டும் வடக்கில் ஆயுத போராட்டங்களையும் அப்பாவி பொது மக்கள் இறப்பதையும் அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
 
அதேபோல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை மீண்டும் குழப்பும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார்.

No comments:

Post a Comment