Monday 28 April 2014
இலங்கை::மதரீதியாக உருவாகும் பிரச்சினைகளைக் கையாள்வதற்காகவென அமைக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவு, இன்று திங்கட்கிழமை தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அதேவேளையில், சிங்கள ராவய அமைப்பு தனது முதலாவது முறைப்பாட்டை அங்கு பதிவு செய்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் புதிய பொலிஸ் பிரிவு புத்த சாசன, மத விவகாரங்களுக்கான அமைச்சில் இன்று செயற்படத் தொடங்கியுள்ளது. மத ரீதியாக உருவாகும் நெருக்கடிகளை இந்த புதிய பொலிஸ் பிரிவே கையாளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் பிரிவுக்கு இன்று ஆரம்பிக்கப்பட்டவுடன் இங்கு சென்ற சிங்கள பௌத்த தேசியவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பினர், தபீக் ஜமாத் முஸ்லிம் குழுவுக்கு எதிரான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்கள்.
புதிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு பல மத, பல இனத்தவர்களின் உரிமைகள் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், முறைப்பாடுகளை தொலைபேசி மூலமாகத் தெரிவிக்கலாம் எனவும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment