Wednesday, April 16, 2014
நியூயார்க்: தொழில்நுட்பத்தில் அடுத்தமைல் கல்லாக கூகுள்
கண்ணாடிகள் வந்துவிட்டன. அவை நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனை
செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அறிவியலில் புரட்சி என்பது, மின்சாரத்துக்குப் பிறகு
கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் சாத்தியமானது. இன்று
இன்டர்நெட்டின் உலகில் எல்லா தகவல்களையும் ஒரு நோடியில் பெற்று விட முடிகிற
அளவுக்கு அறிவியல் முன்னேறி உள்ளது. அதே போல் ஒரு நாட்டின் மூலை
முடுக்குகளை கூட இன்டர்னெட் மூலம் பார்க்க முடியும். ஆரம்பத்தில் மிக
பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து
கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.
இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி உலகத்தை நம் கண்ணுக்கு,
அருகிலேயே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயர்சியாக
செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை நேற்று முதல் அமெரிக்காவில்
விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது 1,500
டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு
நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்னெட்டில்
வலம் வரலாம்.
இனி கம்ப்யூட்டர்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் கூட டாடா பைபை சொல்லிவிடலாம்.






No comments:
Post a Comment