Monday, April 21, 2014
இலங்கை::இராணுவத்திற்கு. கட்டாயப்படுத்தி எவரையும் இணைத்துக் கொள்ளவில்லை என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். யாழ். தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கோடைத் திருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய உதய பெரேரா, இராணுவம் இன்று தொழிற் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது. தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இராணுவத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள். '1980ஆம் ஆண்டு காலம்வரை உயர்மட்ட பயிற்சிகள் பெற்றவர்களே இராணுவத்தின் இணைக்கப்பட்டனர். ஆனால் தற்போது அவ்வாறில்லை.
கல்வித் தகைமையுள்ளவர்களை இராணுவத்தில் இணைத்து உரிய பயிற்சிகளை வழங்குகின்றோம். இராணுவத்தில் இணைந்து பயிற்சிபெற்ற பின், தேவையேற்படின் இராணுவத்தில் இருந்து வெளியேறவும் முடியும். விரும்பியே படைப்பிரிவில் இணைந்துகொள்ள வேண்டும். எவரையும் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் நாம் இணைத்துக்கொள்ளவில்லை. பயிற்சியளிக்கப்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் ஆரம்பித்த பின்பு தொழில் வழங்குவோம். இவ்வாறு இணைக்கப்படுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளத்துடன் மருத்துவச் செலவு, குடும்பத்திற்கான செலவு போன்ற கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் நோக்கம் எமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதாகும். விருப்பத்தின் பேரில் இணைந்து தொழில்வாய்ப்பினை பெற முடியும். அவ்வாறு இணைவதன் மூலம் தங்களது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கச்செய்ய முடியும். எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று உதய பெரேரா குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment