Monday 28 April 2014
இலங்கை::மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் சில பகுதிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மயோமி சர்வதேச ஆய்வுக் கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மாத்தளை வைத்தியசாலையின் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட 155 மனித எலும்புக்கூடுகள் பற்றிய விசாரணைகளை குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மரபணு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிடடார்.

No comments:
Post a Comment