Saturday, April 19, 2014

இந்தியாவுக்கு இலங்கை தூதர் நியமனம்!

Saturday, April 19, 2014
இலங்கை::இந்தியாவுக்கு இலங்கை தூதர் நியமனம்,
 
இந்தியாவுக்கான, இலங்கை தூதராக தற்போது, பிரசாத் காரியவசம் உள்ளார். இவரை, அமெரிக்க தூதராக நியமிக்க, இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
 
இதையடுத்து, இந்தியாவுக்கான புதிய தூதராக சுதர்ஷன செனவிரட்னே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை பல்கலையில், தொல்லியல் துறை தலைவராக சுதர்ஷன் செனவிரட்னே பணியாற்றி வந்தார்..
 
இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள் ஆகும். தற்போது ஏற்பட்டுள்ள சில அரசியல் பிரச்சினைகள் தற்காலிகமானதுதான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment