Thursday, April 3, 2014

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் காங்கிரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி அவுஸ்திரேலியா அரசே தீர்மானிக்க வேண்டும்: திஸர சமரசிங்க!

Thursday, April 03, 2014
இலங்கை::
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் காங்கிரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி  அவுஸ்திரேலியா அரசே தீர்மானிக்க வேண்டும்: திஸர சமரசிங்க.
 
அவுஸ்திரேலிய எஸ்.பி.எஸ் தொலைக்காட்சி இது குறித்து அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் என்னிடம் இருக்கும் தகவல்களை உங்களுடன் பரிமாறிக் கொள்ள போவதில்லை. அது மிகவும் முக்கியமானது. குறித்த நடவடிக்கை தொடர்பில் நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். நடவடிக்கை நியாயப்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் போதுமான அளவு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன.
 
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவில் இயங்கும் குழுக்களின் உறுப்பினர்களுக்கு எதிராக எப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு  புலி உறுப்பினர் தொடர்பான வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை இலங்கை மக்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்கினர்.
 
இரு தரப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையில் இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையில் ஒரு பொறிமுறை இருக்கின்றது. பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் அவுஸ்திரேலியா கடந்த காலங்களில் அதனை செய்துள்ளது.
இதற்கு இலங்கை ஆதரவு வழங்கியது. இதந்த விடயத்தில் நாங்கள் சிறந்த ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றோம் எனவும் திஸர சமரசிங்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என அந்த அமைப்பை சேர்ந்த சாம் பாரி மறுத்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறப்பானது. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் நாட்டு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பராமரித்து வருகிறது. இது அதனை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகும்.
அவுஸ்திரேலிய அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் நாங்கள் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானத்திற்கு பதிலடி வழங்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த தீரமானத்தை எடுத்துள்ளளது என நாம் நம்புகிறேன்.
அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் சர்வதேச ரீதியில் மதிப்படும் ஒரு அமைப்பு. நாங்கள் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் காங்கிரஸ் மீது நல்ல அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர் எனவும் சாம் பாரி கூறியுள்ளார்.
எனினும் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள குழுக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க கூறியுள்ளார்.
புலிகளின் இறுதி இலக்கு பிரிவினையாகும். எந்த அமைப்புகளும் இந்த பிரிவினைவாதத்தை நிராகரிக்கவில்லை.
இந்த அமைப்புகள் இலங்கையில் பிரிவிவாத பயங்கரவாத எண்ணக்கருவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன எனவும் அவர் கூறினார்.
 
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க, நம்பத்தகுந்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment