Thursday, April 03, 2014
இலங்கை::வட மாகாணத்தில் மும்மொழிக் கொள்கை அமுலாக்கத்திற்காக மும்மொழிக் கற்கை வளவாளர்கள் 21 பேர் மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாலுள்ள மாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்தில் வைத்து இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

வடக்கில் மும்மொழிக் கொள்ளையை அமுல்படுத்தும் வகையில், இதற்கான அலுவலகம் கடந்த வாரம் யாழில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு வளவாளர்கள் தேர்வு நடைபெற்று வளவாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய 12 சிங்கள மொழி வளவாளர்களும், 9 ஆங்கில மொழி வளவாளர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த மும்மொழிக் கொள்ளை அமுலாக்கத்தின் தொடராக இதன் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 6ம் தேதி கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment